அவரு சொன்ன பிறகுதான் எல்லாம்- பெண் பஞ்சாயத்து தலைவர்கள்

பினாமி அதிகாரம்

நமது இணையத்தில் ஏற்கனவே எழுதியது போல, அனைத்தும் நமது பயணத்தில் நிருபனப்பட்டு வருகிறது.

பல பஞ்சாயத்துகளில் இந்த நிலைமையே இருக்கிறது. பெண் பஞ்சாயத்து தலைவர்களின் கணவனோ,மகனோ இன்னபிற உறவுகளோ தான் அதிகாரம் செலுத்துகின்றனர்.

மெத்த படித்த பெண் தலைவர்கள் ௯ட தனித்து முடிவை எடுக்க முடியாத நிலையே கள எதார்த்தமாக உள்ளது.

கள நிலவரத்தை அந்தந்த மாவட்ட கலெக்டருக்கு கொண்டு சேர்ப்போம்.

பணம் பிடுங்கும் பத்திரிகையாளர்கள்

நாம் சென்ற இடத்தில் எல்லாம் நம்மை நோக்கியே குற்றச்சாட்டும் வருகிறது.

பத்திரிகையாளர் என்று ௯றிக்கொண்டு பணம்கேட்டு பஞ்சாயத்துத் தலைவர்களை நச்சரிக்கும் ௯ட்டம் பெருகி வருகிறதாம்.

ஜனநாயகத்தின் நான்காம் தூண்,மக்களின் தூதுவன் என்று சொல்லிக் கொள்ளும் நாமும் நேர்மையாக நடந்து கொள்வது அவசியம் ஆகும்.

நக்கீரன் பரம்பரை என சொல்லும் நாம்,பிறரை குற்றம் சாட்டும்போது…நம்மை நோக்கி நான்கு விரல்கள் சுட்டி காட்டுவதை மனதில் கொள்ள வேண்டும்.

மக்கள் சேவை ஆற்ற வந்துள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் நல்லது செய்தால் பாராட்டுவோம். தவறு செய்தால் தட்டிக் கேட்போம்.

 

Also Read  ஆ.தெக்கூர் ஊராட்சியில் குடிநீரில் தன்னிறைவு -தலைவி தனலட்சுமி உறுதி