குப்பை கொட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம்

கந்தவேல் அறிவிப்பு

 கோவை மாவட்டம்

சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி முத்து கவுண்டன் புதூர்.

அதன் தலைவர் கந்தவேல் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கையில்..!

முத்து கவுண்டனூர் ஊராட்சி உட்பட்ட பகுதிகளில் யார் குப்பை கொட்டினாலும் ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும், குப்பை கொட்டுபவர்கள் யாரென்று காட்டிக் கொடுத்தால் அவர்களுக்கு ஐநூறு ரூபாய் சன்மானம் என்றும் வெளியிட்டுள்ள அறிக்கை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

இதுகுறித்து முத்து கவுண்டன் புதூர்  ஊராட்சி தலைவர் கந்தவேல் நமது “tnபஞ்சாயத்து செய்திகளுக்காக” அளித்த சிறப்பு பேட்டி அதில் அவர் கூறி உள்ளதாவது.

இந்த அறிவிப்பு யார் மனதையும் புண்படுத்த கூடாது என்பதே….!

சுத்தம் சுகாதாரம் தேவை என்பதை வலியுறுத்துவதற்காக தான் இந்த அபராத அறிவிப்பு என்று கூறினார்….!

Also Read  பச்சுடையம்பாளையம் ஊராட்சி - நாமக்கல் மாவட்டம்