எட்டக்காபட்டி பஞ்சாயத்து தலைவி பேட்டி

எட்டக்காப்பட்டி ஊராட்சி

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2617 ஆகும். இவர்களில் பெண்கள் 1320 பேரும் ஆண்கள் 1297 பேரும் உள்ளனர்.

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்:

  1. எம்.பி.சி காலனி
  2. எதிர்க்கோட்டை
  3. உப்புப்பட்டி
  4. எட்டக்காபட்டி
  5. ஆதிதிராவிடர் காலணி
  6. செல்லையாபுரம்

இந்த ஊராட்சியின் தலைவியாக புஷ்பவள்ளி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஊராட்சியில் சில பணிகள் மட்டுமே செய்துவருகிறோம்.

பஞ்சாயத்திற்கு வரவேண்டிய நிதி வந்த உடன் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என உறுதி அளித்தார்.

Also Read  சொந்த பணத்தில் பஞ்சாயத்து பணிகள்-கொம்மங்கியாபுரம் தலைவர் தகவல்