கொரோனா யுத்தத்தில் வலையப்பட்டி ஊராட்சி…

விருதுநகர் மாவட்டம்

கொரோனா வைரஸ் எதிர்ப்பு.. தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவது  அனைவரும் அறிந்த செய்தியே…

கொரோனா எதிர்ப்பு யுத்தத்தில் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் தீவிரமாக நகர சுத்தி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்,

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் உறுப்பினர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள்…. அல்லும் பகலும் அயராது பாடுபட்டு கொரோனா எதிர்ப்பு பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார்கள்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலை அருகே உள்ளது

வலையபட்டி கிராமம். வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி ஆகும்.

சுமார் ஆயிரத்தி 600 மக்கள் வசிக்கும் வளையபட்டி கிராம ஊராட்சி 6 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இங்கு கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையாக மருந்து தெளித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை தீவிரமாக செய்வதுடன் சுவர் வாசகங்களையும் சிறப்புடன் எழுதி வைத்திருப்பது ஒரு தனி சிறப்பு.

இந்தப் பகுதியை நாள்தோறும் தீவிரமாக கவனிப்பதில், வலையபட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் அதன் தலைவி ராமலட்சுமி முத்துசாமி அவர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது.

Also Read  இராமசாமியாபுரத்தில் சுகாதார பணிகள்