நல்லமநாயக்கன்பட்டி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்

ஊராட்சி பெயர்: நல்லமநாயக்கன்பட்டி,

ஊராட்சி தலைவர் பெயர்:வை.முத்துலட்சுமி,

ஊராட்சி செயலாளர் பெயர்:-இரா.தர்மராஜ்,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4212,

ஊராட்சி ஒன்றியம்:இராஜபாளையம்,

மாவட்டம்:விருதுநகர்,

ஊராட்சியின் சிறப்புகள்:60 ஆண்டுகளுக்கு பிறகு ஆதி திராவிடர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர் அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் எனபொதுமக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.ஊராட்சியின் முக்கிய திருவிழாக்கள் சித்திரை பொங்கல் திருவிழா.மேற்படி ஊராட்சியில் சிட்கோ தொழிற்பேட்டை,ஸீ ஜெயஜோதி அன் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் ஸ்பின்னிங் மில் நிறுவப்பெற்று தினந்தோறும் 1500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு செய்து கொடுத்துள்ளனர்.ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு நல்லமுறையில் ஒத்துழைப்பு வழங்கி அரசு திட்டப்பணிகள் நடைபெற இணக்கமாக உள்ளனர்.

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:நல்லமநாயக்கன்பட்டி,ந.புதூர்,சங்கரலிங்காபுரம்,பானாங்குளம்,ரெங்கப்பநாயக்கன்பட்டி,காமாட்சிபுரம்,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:சாத்தூர்,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:இரண்டு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் கழிப்பறை கட்ட இடமின்மை

Also Read  கோவிலாங்குளத்தில் அரசு மருத்துவமணை