இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள்

மருத்துவ மூலிகையான இஞ்சி

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

Also Read  மஞ்சளின் மகிமை-கட்டாயம் படிங்க

இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

செரிமானத்துக்கு உதவும் ஒரு மருத்துவ மூலிககையான இஞ்சியை ஒரு சிலர் சேர்த்து கொள்ளக்கூடாது….!

இஞ்சியை ஒருவர் அதிகம் உட்கொண்டால்,  வீக்கம், வயிற்றுப் பிரச்னைகள், இதயப் பகுதியில் எரிச்சல் போன்றவை ஏற்படும். ஒரு நாளைக்கு 4 கிராமுக்குமேல் சேர்க்கக்கூடாது

Also Read  விஷ்ணு கிராந்தை மூலிகை எதற்கு மருந்தாக பயன்படுகிறது...?

பின்வரும் சில பாதிப்புகள் உள்ளவர்கள்,  இஞ்சியைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது….!
செரிமானத்துக்கு உதவும் இஞ்சியை  கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தது அல்ல.

ரத்தக் கோளாறு உடையவர்கள் முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.

உதாரணமாக, சர்க்கரைநோய், உடல்பருமன், இதயக்கோளாறு, ரத்த ஒழுக்கு (Hemophilia) இருப்பவர்கள், ரத்தம் உறைதல் (Blood clotting) பிரச்னை உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

பித்தப்பையில் கல் இருப்பவர்கள், அல்சர் இருப்பவர்கள், இஞ்சியைத் தவிர்ப்பது நல்லது.

ஏதாவது ஒரு நோய்க்கான சிகிச்சைக்காக ஆபரேஷன் செய்யத் தயாராகும் நபர்கள், இஞ்சியை உணவில் சேர்க்கக் கூடாது.

உடல் எடை குறைந்தவர்கள் இஞ்சியை தவிர்க்க வேண்டும், இஞ்சி வயிற்றில் செரிமானத்துக்குத் தேவையான என்சைம்களை தூண்டியபடி இருக்கும்.

வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். இது, விரைவாக உணவை ஜீரணமாக்கிவிடும். இந்த நிலை தொடர்ந்தால்,

உடல் எடை குறையத் தொடங்கும். கூடுதலாக, முடி உதிர்தல், மாதவிடாய்க் கோளாறுகள், தசைகளில் சத்துக் குறைதல் போன்றவை ஏற்படும்.