கொரனொ
வைரஸை எதிர்த்து உலக நாடுகள் போராடி வருகின்றன.
இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பத்து நாட்களுக்கு மேல் கடந்துவிட்டன. மதுவிற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
அத்யாவசியமான பொருட்கள் வாங்குவற்கு மட்டுமே மளிகை கடைகள் மதியம் 1மணி வரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தினசரி ஐந்து முறைக்கு மேல் கைகளை சுத்தம் செய்வது அவசியம் என்கிறார்கள். அதற்கு பயன்படுத்தப்படும் சானிடைசர் உற்பத்தி போதுமானதாக இல்லை.
மதுபான ஆலை
மதுவிற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் மாற்று தயாரிப்பாக சானிடைசர் தயாரிக்கும் பணியை பல நாடுகளில் மது உற்பத்தி ஆலைகள் ஆரம்பித்துவிட்டன.
இந்தியாவில் தெலுங்கானாவிலும் மதுஆலையில் சானிடைசர் தயாரிக்க உத்தரவு போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆல்கஹாலை கொண்டு தயாரிக்கும் சனிடைசர் உற்பத்தியை தொடங்க உடனடியாக உத்தரவிடவேண்டும்.
தயாரிக்கப்படும் சானிடைசரை ரேசன் கடை மூலமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யவேண்டும்.
இவ்வாறு மது ஒழிப்பு,விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லப்பாண்டியன் நம்மிடம் தெரிவித்தார்.