மின்கம்பத்தில் மாட்டிய மைனாவை மீட்ட லோகநாதன்

வாழ்த்துவோம்

பல்லடம் பனப்பாளையத்தில் மின் கம்பத்தில் ஓர் மைனா பறவையின் கால் மின் கம்பியில் நூலால் சிக்கி உயிருக்கு போராடி கொண்டு இருந்தது .

அதன் துணை பறவையின் சத்தத்தில் கவனித்து மின் ஊழியருக்கு தகவல் கொடுத்து சில நிமிடங்களில் மாதப்பூர் மின்சார வாரிய மின்பாதை ஆய்வாளர் லோகநாதன் வந்து அதன் உயிரை காப்பாற்றினார்.

 

அவருக்கு ‌மாதப்பூர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

மனிதநேயம் குறைந்து வரும் காலத்தில், மாட்டிக்கொண்ட மைனாவை மீட்ட மின்வாரிய ஊழியரை நமது இணையத்தின் சார்பாக இதயத்தால் வாழ்த்துவோம்.

 

Also Read  ஜெகதேவி ஊராட்சியில் நிவாரண பொருட்கள்