கட்சிகள்
தமிழகத்தில் கட்சிகளின் சண்டைகள் என்பது சர்வசாதாரணம். அதிலும் திமுக,அதிமுக இருவேறு துருவங்கள்.
உள்ளாட்சி தேர்தலில் பஞ்சயத்து நிர்வாகத்திற்கு போட்டியிடுபவர்கள் சுயேட்சையாகவே மட்டுமே போட்டியிட முடியும்.
அப்படி நடக்கும் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஏதாவது ஒரு கட்சியை சார்ந்தவர்களாகவே இருப்பர்.ஆனால்…அவருக்கு அனைத்து கட்சியினரும் வாக்களித்து ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுப்பர்.
வெற்றி பெற்ற உடன் தான் சார்ந்த கட்சி நிறத்தில் ஊராட்சி கட்டிடத்தில் தன் பெயரை எழுதி வைப்பார்கள்.
ஒகளூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள இந்த ஊராட்சியில் வெற்றிபெற்றுள்ள கு.க.அன்பழகன் கருப்பையா என்பவர் திமுக கட்சியை சேர்ந்தவர்.
ஊராட்சி நிர்வாகத்தில் கட்சி அரசியலை கலக்காமல் அனைவரும் பொதுவாக அவர் செயல்படுவதை நமது இணையக்குழுவின் சார்பாக பாராட்டுகிறோம்.
கொரொனா நிவாரண உதவியை அதிமுக சார்பாக ஊராட்சி பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்வை அனுமதித்து,அதில் தானும் கலந்து கொண்டுள்ளார்.
அனைத்து ஊராட்சிகளுக்கும் உதாரணமான செயலை ஒகளூர் ஊராட்சியில் நடத்தி காட்டிய அவருக்கு வாழ்த்துக்கள்.
ஊராட்சி தலைவராக இருப்பவர்கள் தான் சார்ந்த கட்சியோ,சாதியோ,மதமோ பாராது அனைவருக்கும் பொதுவாக செயல்படவேண்டும்.
குறிப்பாக…கட்சி அரசியலை ஊராட்சி நிர்வாகத்தில் ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
அரசியல் சார்ந்த செய்திகளை நமது இணைய தளம் வெளியிடாது.
மக்களுக்கு நன்மை என்றால் பாராட்டுவோம்…எதிரான எந்த செயலையும் கண்டிப்போம்.