மக்களை காப்பவர்களுக்கு வைட்டமின் மாத்திரை வழங்கிய மாதப்பூர் ஊராட்சி

திருப்பூர் மாவட்டம்

கொரொனா தடுப்பு பணியில் நேரடியாக மக்களைக் காக்க போராடும் மகத்தானவர்கள் உள்ளாட்சி பணியாளர்கள்.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் ஊராட்சியை தூய்மையாக்கி,கிருமி நாசினி தெளிக்கும் செயல்களில் ஈடுபடும் தூய்மைகாவலர்களை பாதுகாக்கும் பணியில் மாதப்பூர் ஊராட்சி ஈடுபட்டுள்ளது.

மாதப்பூர் ஊராட்சியில் தூய்மை காவலர்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகளை  ஊராட்சி மன்ற தலைவர் ச.அசோக்குமார் வழங்கினார்.

ஊராட்சியின் செயலை அனைவரும் பாராட்டுவோம்.

Also Read  அகரம் - நாமக்கல் மாவட்டம்