அள்ளிக் கொடுக்கும் ஊராட்சி தலைவர்

வாழ்த்துவோம்

9 ஊர் மக்களுக்கும் எங்கள் குடும்பத்தால் ஆன சிறு உதவி.
நடராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் “சந்திரா தமிழரசன்” அவர்களளது அன்பான அறிவிப்பு.

நாளை முதல் நமது பஞ்சாயத்தில் குடியிருக்கும் அணைத்து குடும்பம்களுக்கும் (9 ஊர்களுக்கும்) 10 கிலோ பொன்னி அரிசியை நமது நடராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் தன் சொந்த பணத்தில் இருந்து( 3000 கிலோ) வழங்குகிறார். இந்த அரிசியானது தற்பொழுது 180 முட்டை(180×10 kg) நடராஜபுரம் ஊராட்சி மன்ற கட்டடத்திலும் மீதமுள்ள 120 மூடைகள் (120x10kg ) கோவினிப்பட்டி பள்ளிக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அரிசியானது மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக மற்றும் ஒரே இடத்தில் கூட்டம் சேருவதை தவிர்ப்பதற்கும், இந்த அரிசி வழங்கும் நிகழ்ச்சியை மூன்று நாளைக்குள் பிரித்து வழங்காலம் என்று இருக்கிறோம். அவை பின் வருமறு.

1. 27/4/2020 – நடராஜபுரம், வடக்கு மும்மு டுசம்பட்டி மற்றும் தெற்கு மம்முடுசம்பட்டி.(பஞ்சாயத்து ஆபீஸ் )

2. 28/4/2020- பிளம்பிச்சம்பட்டி(மாரியம்மன் கோவில்),
மேல சக்கரவர்த்திபட்டி( யேசு கோவில் ) கீழசக்கரவர்த்திப்பட்டி (மாரியம்மன் கோவில்) மற்றும்
வீரனேந்தேள்பட்டி (மாத கோவில் )

3. 29/4/2020- கோவினிப்பட்டி, துவரம்பட்டி மற்றும் சத்தியா நகர் (கோவினிப்படி மாரியம்மன் கோவில்)

முகநூல் பக்கத்தில் பார்த்தோம். பாராட்ட வேண்டியதை பாரட்டுவது பத்திரிகைதர்மம் என்பதற்காக இந்த செய்தியை வெளியிடுகிறோம்.

Also Read  கொரொனா தடுப்பு பணியாளர்களுக்கு நடராஜபுரம் ஊராட்சி சார்பாக நிவாரண பொருட்கள்

கோடிகோடியாய் கொள்ளை அடித்த அரசியல்வாதிகள்,இந்த கொரொனா காலகட்டத்தில் கிள்ளி கூட கொடுக்காத நிலையில்…அள்ளிக் கொடுக்கும் இந்த ஊராட்சி தலைவரை எல்லோரும் வாழ்த்வோம்.