நாகமல்லி பூ தரும் நன்மைகள்

நாகமல்லி இலை மற்றும் பூ.

கண்நோய், வண்டு கடி, தேள் கடி ஆகியன நீங்கும். நாள்பட்ட தோல் வியாதி ஆகியன குணமாகும்.

வயிற்றுப் புச்சி நீங்க
நாம் உண்ணும் உணவிலிருந்து சில கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் வயிற்றில் வளரஆரம்பிக்கின்றன. இப்பூச்சிகள் வயிற்றின் உட்புறச் சுவர்களில் ஒட்டிக்கொண்டு அங்கு புண்களை ஏற்படுத்துகின்றன.

மேலும் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச் சத்துக்களை உறிஞ்சி விடுகின்றன. இவை நீங்க நாகமல்லியின் இலையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிய நீரை அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.
 

மலச்சிக்கல் தீர
வயிற்றுப் பூச்சிகளை நீக்குவதுடன் மலச்சிக்கலைப் போக்கி நன்கு பசியைத் தூண்டும் சத்தி இதற்குண்டு.

இரத்தத்தை சுத்தப்படுத்த
இதன் வேரினை நிழலில் காயவைத்து பொடிசெய்து பாலில் கலந்து கொதிக்க வைத்து இரவுபடுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

பாம்பு விஷம் நீங்க
நாகமல்லி என்ற பெயரில் இதன் மருத்துவக் குணம் அனைவருக்கும் தெரியவரும்.
விஷப் பாம்பு கடித்து விட்டால் நாகமல்லியின் இலையை மென்று சாற்றை மெதுவாக உள்ளே இறக்கினால் விஷம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும்.

படர்தாமரைகரப்பான் நீங்க
நாகமல்லியின் வேரை எலுமிச்சம் பழச் சாறு விட்டு அரைத்து கரப்பான், படர்தாமரை மற்றும்பூஞ்சன நோய்களுக்கு வெளிப்பூச்சாக பூசி வந்தால் மேற்கண்ட நோய்கள் நீங்கும் .

மூட்டுவலி நீங்க
மூட்டு வலியால் அவதியுறுபவர்கள் இதன் இலையை அரைத்து மூட்டின் மேல் பூசிவந்தால் மூட்டு வலி நீங்கும்.