கணக்கன்குடி ஊராட்சி KANAKKANGUDI Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் தாலுக்காவில் அமைந்துள்ளது கணக்கன்குடி. இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களை உளாட்சித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 934 ஆகும். தற்போதைய நிலவரப்படி 1114. இவர்களில் பெண்கள் 552 பேரும் ஆண்கள் 562 பேரும் உள்ளனர். கணக்கன்குடியில் அனலேந்தீஸ்வரர் கோயிலிலும் நெருப்பு வடிவாக சிவன் உள்ளார். இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.