இதை எல்லாம் சாப்பிடுங்க- ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்

வழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு ரத்த நாளங்களை வலுவடையச் செய்யும்.

தினமும் காலை வாழைப்பழம் சாப்பிடுவது நாளை புத்துணர்ச்சியாக துவக்க உதவும்.

பருப்பு

தென்னிந்திய உணவுகளில் குழம்பில் பருப்புஜ் சேர்க்கப்படும். இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு இதன் நார்ச்சத்து ரத்த குழாய்களை வலுவடையச் செய்யும்.

மேலும் கெட்ட கொலஸ்ட்ராலை நாளங்களில் தங்கவிடாமல் நீக்கும் தன்மை இதற்கு உண்டு.

புளூ பெர்ரி

மேலை நாடுகளில் பிரபலமான பழம் புளூபெர்ரி. நம்மூரில் அதிகம் சாப்பிடபடுவதில்லை எனினும் ஆந்தோ சயனின் என்ற ஆண்ட் ஆக்ஸீடண்ட் இதில் உள்ளது,

இது ஹைப்பர் டென்ஷன் எனப்படும் மன அழுத்தத்தை குறைக்கும்.

தர்பூசணி

தற்பூசணி இல்லாத கோடை காலங்களே இல்லை. உடல் சூட்டைத் தணிக்க இதனை பலர் உட்கொள்வர்.

சிட்ருலீன் எனப்படும் அமினோ அமிலம் இதில் உள்ளது. இது ரத்த நாளங்கள் ரிலாக்ஸ் செய்ய உதவும்.

சூரிய காந்தி விதை

மெக்னீசியம், பொட்டாசியன், போலிக் அமிலம் உள்ளிட்ட பல தாத்துக்கள், அமிலங்கள் இவற்றில் உள்ளன.

இதனை மிதமான சுட்டில் வறுத்து சாப்பிடலாம். இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

லெட்யூஸ்

கீரை வகைகளில் ஒன்று லெட்யூஸ். இதில் வைட்டமின் பி காம்பிளஸ் அதிகம் உள்ளது.

Also Read  வைரஸை விரட்டும் பவளமல்லி

தினமும் பச்சையாக இவற்றை சாப்பிடுவதால் ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். ரத்தவோட்டம் சீராக இருக்கும்.