புளி-தலைவலி போக்கும் மருந்து தெரியுமா?

புளி

புளியங்கொட்டைத் தோலைக் காயவைத்துப் பொடியாக்கி தினமும் காலையில் சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் பேதி , நீர்க்கடுப்பு , வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.

புளி , பூண்டு , மிளகு , தக்காளி , கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து ரசமாக வைத்து சாப்பிட்டு வந்தால் சளி ,மற்றும் நுரையீரல் கோளாறுகளை உடனே குணப்படுத்தும்.

புளிக்கரைசலில் உப்பைக் கரைத்து சூடு படுத்தி , அதில் வாய் கொப்பளித்தால்  பல்வலி , தலைவலி போன்றவை குணமாகும்.

புளி , உப்பு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து உள்நாக்கில் தடவி வந்தால் , உள்நாக்கு(டான்சில்) வளர்ச்சி கரைந்துவிடும்.

புளிக்கரைசலில் (30 மில்லி) , மஞ்சள், சர்க்கரை , உப்பு , மூன்றையும் தலா ஓரு ஸ்பூன் கலந்து சூடுபடுத்தி , வீக்கம் , ரத்தக்கட்டு , சுளுக்கு ஏற்பட்ட இடங்களில் தடவிவந்தால் இரண்டே நாள்களில் குணம் பெறலாம்.

புளி கரைத்த தண்ணீரில் புளிய இலையை சேர்த்து அரைத்து ,அதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குழைத்து கால் மற்றும் மூட்டுகளில் உள்ள வீக்கத்தின் மீது பற்றுப்போட்டு வந்தால் மூட்டு வீக்கம் குணமாகும்.

புளியங்கொட்டையை அரைத்து கட்டிகள் மீது வைத்துக் கட்டிவந்தால் , கட்டிகள் விரைவில் கரைந்துவிடும்.

Also Read  நாகமல்லி பூ தரும் நன்மைகள்