சித்த மருந்தை பயன்டுத்துங்கள்-மத்திய,மாநில அரசுகளுக்கு அன்புமணி கோரிக்கை

கொரொனா

இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

வல்லரசு நாடுகள் கூட வழியின்றி தவித்துவருகிறது.

இந்த நேரத்தில்…சித்த மருத்துவத்தை பயன்படுத்த வேண்டுமென மத்திய,மாநில அரசுகளை அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவர்…முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.ஆங்கில வழி மருத்துவம் பயின்றவர்.

தமிழ்…தமிழ் என்று வாய்கிழிய கூச்சல் போடுபவர்கள் எல்லாம் ஒத்த குரலில் கோரிக்கை வைக்க வேண்டிய தருணம் இது.

இதுபோன்ற வைரஸ் தாக்குதலின்போது நிலவேம்பு குடிநீரை பயன்படுத்தி நிவாரணம் கண்டுள்ளோம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே முன்னின்று நிலவேம்பு குடிநீரை தானே விநியோகித்தார்.

காலம் தாழ்த்தாமல்….இந்த விடயத்தில் உடனே மத்திய,மாநில முடிவெடுக்க வேண்டும்.

Also Read  கொரொனா-உள்ளாட்சி பயணியாளர்களுக்கு 50லட்சம்