ஓசூர் ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு

திருவண்ணாமலை மாவட்டம்

வந்தவாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓசூர் ஊராட்சி செயலாளரும்,தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில தலைமை நிலையச் செயலாளருமான வந்தவாசி V.சுரேஷ் அவர்களிடம் நமது இணையததின் சார்பாக பேசினோம்.

எங்கள் ஊராட்சியின் தலைவராக E.சந்திரஹாசன் பதவி ஏற்ற பிறகு,மக்கள் நலப்பணி தொடர்ந்து நடந்து வருகின்றன.

கொரொனா தடுப்பு பணியாக பல்வேறு செயல்பாட்டை நடைமுறைப்படுத்தி உள்ளோம்.

ஆரம்பசுகாதார நிலையம்,நியாயவிலைக்கடை,தொடக்க வேளாண்மை சங்க கட்டிடம் என பல்வேறு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கொரொனா பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்து வருகிறது என்றார்.

Also Read  இந்தியாவில் முதல் முயற்சி