பாராட்டப்பட்ட தூய்மை பணியாளர்கள்-அயன்கரிசல்குளம் ஊராட்சி

விருதுநகர் மாவட்டம்

வத்திராயிருப்பு ஒன்றியம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணியில் ஈடுப்டுள்ள தூய்மை பணியாளர்கள் பாராட்டப்பட்டனர்.

ஊராட்சியின் தலைவி பழனிசெல்வி,துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு இலை போட்டு உணவு வழங்கி,பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.

மக்களின் உயிர்காக்க போராடும் தூய்மை பணியாளர்களை பெருமைப் படுத்திய இவர்களின் செயலை நாமும் பாராட்டுவோம்.

Also Read  டி.கடம்பன்குளம் ஊராட்சி - விருதுநகர் மாவட்டம்