ஆ.தெக்கூர் ஊராட்சியில் குடிநீரில் தன்னிறைவு -தலைவி தனலட்சுமி உறுதி

ஆ. தெக்கூர் ஊராட்சி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2224 ஆகும். இவர்களில் பெண்கள் 1167 பேரும் ஆண்கள் 1057 பேரும் உள்ளனர்.

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்:

  1. ஆ.வடக்கூர்
  2. சிங்கமங்கலப்பட்டி
  3. ஏ.தெக்கூர்

ஊராட்சி தலைவியாக தேர்தெடுக்கப்பட்டுள்ள திருமதி. தனலட்சுமி திருப்பதி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தோம்.

குடிதண்ணீர்

ஒவ்வொரு வீட்டிற்கும் தடையின்றி குடிநீர் கிடைத்திட அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.

குடிநீர் குழாய்களில் மீட்டர் பொறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

குப்பை அகற்றுவது,வாறுகால் சுத்தம் என அடிப்படை பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

செடிகளை வெட்டுவதற்கு இயந்திரம் வாங்கி உள்ளோம்

பாதிக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் சரி செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வசதிகளும் உள்ள ஊராட்சியாக எங்கள் பஞ்சாயத்து மாற்றிக்காட்டுவோம் என்றார்.

Also Read  மேலராங்கியம் ஊராட்சி