சூரிய ஒளி மின்சாரம்-தென்னங்குடி தலைவர் சபதம்

தென்னங்குடி ஊராட்சி

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார்கோவில் வட்டாரத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, கந்தர்வகோட்டை சட்டமன்றத்தொகுதிக்கும் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1954 ஆகும். இவர்களில் பெண்கள் 1023 பேரும் ஆண்கள் 931 பேரும் உள்ளனர்.

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்

  1. கிழவம்பட்டி
  2. சீரங்கம்பட்டி
  3. உச்சாணி
  4. தென்னங்குடி

ஊராட்சி தலைவருக்கு வாழ்த்து கூறி விட்டு உரையாடினோம்.

அப்போது அவர் கூறியதாவது….

குடிநீர் பிரச்சனையே எங்கள் பஞ்சாயத்தில் முக்கியமானது ஆகும். ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிச்சனையை முழுமையாக தீர்த்திட அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.

அனைத்து அடிப்படை வசதிகளையும் அமைத்து தர அயராது உழைப்போம்.

குறிப்பாக,சூரிய ஒளி மின்சாரத்தை அனைத்து மின்விளக்குகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவருவோம். படிப்படியாக பஞ்சாயத்தின் அனைத்து செயல்பட்டிற்கும் சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார்.

மாற்றம் என்பது கிராமத்தில் இருந்தே தொடங்கவேண்டும் என்பதற்கு தென்னங்குடி ஊராட்சியே உதாரணமாகட்டும் என நமது இணையததின் சார்பாக வாழ்த்து தெரிவித்தோம்.

Also Read  மக்கள் பணியே மகத்தான பணி - மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி