வில்லிசேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம்

கோவில்பட்டி ஒன்றியம் வில்லிசேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் வைத்து இன்று காலை 11 மணியளவில் வில்லிசேரி ஊராட்சி மன்ற தலைவர் திரு.ப வேலன் அவர்கள் தலைமையில் மே தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது

இக்கூட்டத்தில் கிராம வளர்ச்சித் திட்டம் சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் நெகிழி கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு திரவக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் ஜல்ஜீவன் இயக்கம் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் நான் முதல்வன் திட்டம் வறுமை குறைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறுஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக திருமதி.கஸ்தூரி சுப்புராஜ் ஒன்றியக்குழு பெருந்தலைவர் அவர்கள் மற்றும் திரு.ராஜேஸ்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) அவர்களும் கலந்து கொண்டனர். அலுவலக பற்றாளராக திருமதி வீரலட்சுமி அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் பள்ளி தலைமை ஆசிரியை. கிராமநிர்வாக அலுவலர் சுகாதார ஆய்வாளர் செவிலியர் வேளாண் அலுவலர்கள் ரேசன் கடை அலுவலர் துணைதலைவர் திரு.காசிராஜன் அவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Also Read  சிவகங்கை மாவட்ட உதவி இயக்குநர்(தணிக்கை) பதவி ஏற்பு