நட்டாத்தி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

நட்டாத்தி ஊராட்சியில் மே தின கிராமசபைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் நட்டாத்தி ஊராட்சியின் மே தின கிராமசபைக் கூட்டம் கொம்புக்காரன் பொட்டல் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சுதாகலா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எஸ்விபிஎஸ் பண்டாரம் அவர்கள் முன்னிலை வகித்தார். பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப், வார்டு உறுப்பினர்கள் ஜான்சிராணி, சரோஜா, பண்டாரம், மணி மந்திரம் அங்கன்வாடி பணியாளர்கள் ஜோதிகனி, உச்சிமாகாளி, தேவிகலா டிவிஎஸ் தொண்டு நிறுவனம் சார்பாக செல்வி, திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளச்சாமி பணித்தள பொறுப்பாளர்கள் எஸ்தர், மருதவள்ளி, மேரி ஆனந்தி மற்றும் ஊராட்சி பொது மக்கள், சுயஉதவிக்குழுவினர் 100 நாள் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 2022 – 23 நிதி ஆண்டிற்கான வரவுசெலவுகள், 2021-22 ஊராட்சி தணிக்கை அறிக்கை, திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, அனைவருக்கும் வீடு திட்டம் கணக்கெடுப்பு ஒப்புதல், நெகிழி ஒழிப்பு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள், 15வது நிதிக்குழு மானிய பணிகள் ஒப்புதல், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகள் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Also Read  S.V மங்களம் ஊராட்சி - இராமநாதபுரம் மாவட்டம்

இறுதியில் தூய்மை கிராம உறுதிமொழி எடுக்கப்பட்டது.

சின்ன நட்டாத்தி கிராமத்தில் தனியார் நிலத்தில் அரசு அனுமதியுடன் தனி நபர்கள் மண் அள்ளுவது குறித்து கிராம மக்களால் இதற்கு மேல் ஆழப்படுத்தி திரும்ப மண் அள்ளக்கூடாது எனவும் புதிதாக சின்ன நட்டாத்தி பகுதியில் வேறு இடங்களில் மண் அள்ள அரசு மண் அள்ள தனி நபர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது எனவும் கிராமசபையில் வலியுறுத்தினர்.

கூட்ட முடிவில் அனைவருக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது. கிராமசபைக் கூட்டத்திற்கு ஊராட்சி செயலர் முத்துராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.