விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமசாமியாபுரம் ஊராட்சி தலைவியாக கிரேஷ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் பேசியபோது…
எங்கள் ஊராட்சியில் நான்கு வீடுகளுக்கு ஒரு குழாய் அமைத்து தடையில்லாமல் தாமிரபரணி தண்ணீர் கிடைத்திட பணிகளை செயல்படுத்தி வருகிறோம்.
மகளிருக்கு இலவச தையல் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகிறாம்.
ஊராட்சியின் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி,தூய்மையான பஞ்சாயத்தாக மாற்றிட முழு அளவில் விடாமுயற்சியாக பலகாரியங்கள் செய்து வருகிறோம் என்றார்.
நாம் அவரோடு உரையாடிய நேரத்தில் 130 முதியோருக்கு ஓய்வூதியத்தை பெற்றுத்தர அரசு அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
மக்கள் பணி சிறக்க நாம் நமது வார்த்தை தெரிவித்தோம்.