ஊராட்சியின் சிறப்புகள்
1. 800 வருடங்கள் பழமையான சிவன் கோவில் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் இந்தக் கோவிலில் தான் சிவகங்கை சமஸ்தானம் மன்னர்களுக்கு தற்போது வரை முடிசூட்டும் விழா நடைபெறும். கோயில் திருவிழாவின்போது கிறிஸ்தவர்களும் மண்டகப்படி உபயதாரர்களாக இருந்து வருகிறார்கள் இவர்களுக்கும் கோவில் நிர்வாக மூலம் முதல் மரியாதை செலுத்தப்படுகிறது.
2. இங்குள்ள ஸ்ரீ வடகரை காளியம்மன் கோவில் மற்றும் பெருமாள் கோவிலில் அனைத்து மத மக்களும் வருடம் இருந்து திருவிழாவை சிறப்பாக கொண்டாடுவார்கள்
3. ஊராட்சியில் பழமையான உயர்நிலைப்பள்ளி உள்ளது இப்பள்ளியின் மூலம் எண்ணற்ற அரசு அதிகாரிகள் மற்றும் உயர்ந்த பதவி வகிக்கும் நபர்கள் இப்பள்ளியில் பயின்று உள்ளனர்
4. சோழபுரம் கிராமத்தில் சினிமா படங்கள் எடுப்பதற்கு உகந்த இரண்டு வீடுகள் உள்ளது இந்த வீட்டில் ஆறுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.