மஞ்சளின் மகிமை-கட்டாயம் படிங்க

பயன்பாடுகள்

சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.

பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.

சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது.உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.

பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.

வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது.

இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.

நிப்பானில் ஒகினாவா என்னும் இடத்தில் தேனீர் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.

காய்கறிகளை வாங்கியவுடன் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் கலுவி பயன்படுத்துவதால் மரபனு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.

 

மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் அகவை முதிர்ந்தவர்களுக்கு (வயதானவர்களுக்கு) ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும்அல்சைமர் நோய் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவு (plaque) குறைக்கின்றது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் (curcumin) என்ற ஒரு மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட் புரத சேமிப்புகளை (beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

மூளையில் அல்சைமர் உருவாக்கும் கெடுதிதரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மனித மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா-அமைலோய்ட் புரதங்களை பரிசோதனைக்குழாயில் போட்டு அத்துடன் மிகக்குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா- அமைலோய்ட் புரதங்கள் ஒன்றுசேரவிடாமல், அவை நாறுகள் ஆக்கவிடாமல் பண்ணுகிறது. பீட்டா-அமைலோய்ட் புரோட்டீன்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அழுக்குகளாக சேர்வதே அல்சைமர் நோயாக உருவாகிறது.

Also Read  சிறுதானிய குழிப்பணியாரம் செய்யலாம் வாங்க

ஆகவே இந்த புதிய கண்டுபிடிப்புகள், அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் உதவும் என்னும் கருத்துக்கு வலுவூட்டுகின்றன.

மஞ்சள்தூளைத் திரவ வடிவத்தில் பயன்படுத்தி வெடிகுண்டுகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கலாம் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சாதரண இயல்பு நிலையில் திரவ மஞ்சள் ஒரு மெல்லிய படலமாக இடப்பட்டால் ஒளியை உறிஞ்சி மிளிரும் தன்மை கொண்டது, மஞ்சளில் உள்ள வேதிப்பொருளானது டி.என்.டி (TNT) போன்ற வெடிபொருட்களின் மூலக்கூறுகளை வளியில் இருந்து அகத்துறிஞ்சுவதனால் மஞ்சளின் ஒளிவெளிவிடும் தன்மை மாற்றம் அடைகின்றது; மிளிரும் தன்மை குறைகின்றது