சிறுக்களஞ்சி ஊராட்சி – ஈரோடு மாவட்டம்

 

1. ஊராட்சி பெயர்
சிறுக்களஞ்சி

2. ஊராட்சி தலைவர் பெயர்
ஜெயக்கொடி

3. ஊராட்சி செயலாளர் பெயர்
நவீன்குமார்

4. வார்டுகள் எண்ணிக்கை
9

5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
2336

6. ஊராட்சி ஒன்றியம்
சென்னிமலை

7. மாவட்டம்
ஈரோடு

8. ஊராட்சியின் சிறப்புகள்

சிறுக்களஞ்சி ஊராட்சி என்பது ஈரோடு மாவட்டம்,பெருந்துறை சட்டமன்ற தொகுதி,சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தின் மேற்கு எல்லையில் இருக்கும் ஒரு அமைதியான ஊராட்சியாகும். இதன் எல்லைகளாக கிழக்கே கூத்தம்பாளையம் ஊராட்சியும் மேற்கே,வடக்கே மற்றும் தெற்கே ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியமும் எல்லைகளாக அமைந்துள்ளன.வற்றாத ஜீவநதிகள் அருகிலேதும் இல்லை என்ற போதிலும் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் மக்கள் தாகம் தணிந்து வருகிறது.முன்னொரு காலத்தில் உணவு உற்பத்தியில் சிறந்து “சிறுக்களஞ்சியம்” எனப் பெயர் பெற்ற இந்த ஊராட்சியில் தற்போது வானம் பார்த்த பூமியாக பருவமழையை நம்பியே விவசாயம் என்ற போதிலும்,ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டதாலும்.இலவச மின்சாரம் தந்த ஊக்கத்தினாலும் விவசாயமே இன்றும் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.இதனுடனே கால்நடை வளர்ப்பு,கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில்களும் நடைபெற்று வருகின்றன. ஊராட்சியின் மத்தியில் (அத்திக்கடவு ) அவினாசியில் இருந்து பலதொழுவு வரை செல்லும் அவரைக்கரை பள்ளம் என்னும் ஓடை செல்கிறது.
இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலோர் இந்து மதத்தினை சார்ந்தவர்கள்.சுமார் 5 % கிருஸ்துவ மதத்தை சார்ந்தவர்களும் வசித்து வருகிறார்கள்.மிகவும் தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ள இவ்வூராட்சியில் மிகவும் பழமை வாய்ந்த சீர்காழிஸ்வரர்,அழகுராய பெருமாள,செல்லாண்டியம்மன்,கருப்பராயன்,ஏரிமுனியப்பன்,கன்னிமார்,மாரியம்மன்,மாகாளியம்மன்,பட்டத்தரசியம்மன் மற்றும் கிறிஸ்துவ ஆலயம் போன்ற ஆலயங்கள் அமைந்துள்ளன.காணும் பொங்கல் திருநாளன்று அனைவரும் ஒன்று கூடி பூப்பறிக்கும் பண்டிகையாக ஆடிப்பாடி மகிழ்வது சிறப்பு.
சிறுக்களஞ்சி கிராம இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளிலும்,பொதுச் சேவைகளிலும் ஆர்வம் மிக்கவர்கள். நடுநிலைப்பள்ளிக்கு தேவையான சுற்றுச்சுவர்,மாணவ மாணவிகளுக்கு தேவையான பெஞ்ச்,மேசைகள் ஆகியவற்றை ஊராட்சி பொதுமக்களே செய்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சிறுக்களஞ்சி பள்ளியில் படித்தவர்கள் அரசு உயர் அதிகாரிகளாகவும், நிதித்துறையிலும், மருத்துவ துறையிலும், காவல் துறையிலும் மற்றும் தொழில் துறையிலும் சிறந்து விளங்கி சிறுக்களஞ்சி ஊராட்சிக்கு பெருமை தேடி தருவது மிகவும் சிறப்புடையதாகும்.

Also Read  முத்தூர் ஊராட்சியில் மேதின கிராமசபை கூட்டம்

9. ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்கள்.

சீரங்கம்பாளையம்
புதூர் காலணி
தொட்டியவலசு
சின்னக்கட்டுப்பாளையம்
சின்னக்கட்டுப்பாளையம் அ.காலணி
எல்லக்காடு
பனப்பாளையம்
பனப்பாளையம் அ.காலணி
பாறக்காட்டுப்புதூர்
கரட்டுப்பாளையம்
வேப்பங்காட்டுபுதூர்
நத்ததோட்டம்புதூர்
சிறுக்களஞ்சி
கிழக்குத்தோட்டம்புதூர்
ஆலம்பாளையம்
காளிபாளையம்
முத்தையன்காடு

10. ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி   பெருந்துறை

11. ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி   திருப்பூர்

தகவல்:- நவீன்குமார்