கிருஷ்ணகிரி மாவட்டம்
பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஜெகதேவி ஊராட்சியில் கொரொனா காலகட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
சுகாதார துறையின் சார்பாக விழிப்புணர்வு மற்றும் பரிசோதனகள் நடைபெற்றன.
ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியும், குப்பை அகற்றுதல் போன்ற தூய்மை பணியும் நடைபெற்றன.
கிரானைட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு பரிசோதனை செய்து,ஆலோசனையும் வழங்கப்பட்டது.
பல்வேறு நிகழ்வுகளை ஊராட்சி மன்றத் தலைவி ஜெயந்தி,துணைத் தலைவர் சரவணன் மற்றும் ஊராட்சி செயலாளர் செங்கதிர் செல்வனும் சிறப்பாக திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர்.
ஊராட்சி பிரதிநிதிகளின் பணி மென்மேலும் சிறக்க நமது இணையத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.