பட்டுத்துறை ஊராட்சி

பட்டுத்துறை ஊராட்சி /Pattuthurai Panchayat

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் பட்டுத்துறை. இது 1956-ல் தோன்றியது. இது சேலம் மாவட்டத்தில், ஆத்தூர் வட்டத்தில் உள்ளது. இங்குள்ள மக்கள் அதிக அளவில் விவசாயத் தொழிலையே செய்து வருகின்றனர். இந்த ஊரிலிருந்து சிலர் துபாய், சவுதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்குத் தொழில் நிமித்தமாகச் சென்றுள்ளனர். சிலர் இயந்திர கலப்பை, சுமை ஏற்றும் வண்டி, நெல் அறுவை இயந்திரம், சோளம் அரைக்கும் இயந்திரம் ஆகியவற்றை சொந்தமாகக் கொண்டு தொழில் செய்து வருகின்றனர்.

சிவசங்கராபுரம் என்பது இந்த ஊரின் ஒரு பகுதியாகும். இங்கு கோழிப்பண்ணைகள் நிறைய உள்ளன. சேலம் மாவட்டத்தில் அதிக அளவு கோழிப்பண்ணை உள்ள பகுதிகளில் இந்தப் பகுதியும் ஒன்று. இந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் முட்டை தமிழகத்தின் பல பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மாரியம்மன் கோவில், வினாயகர் கோவில், பெருமாள் கோவில், புதுப்பட்டி மாரியம்மன் கோவில், சப்பானி கோவில், செல்லியம்மன் கோவில், கருப்பையா கோவில் மற்றும் சில கோவில்கள் உள்ளன.

Also Read  விலாரிபாளையம் ஊராட்சி - சேலம் மாவட்டம்