ஆறகளூர் ஊராட்சி

ஆறகளூர் ஊராட்சி /Aragalur Panchayat

தமிழ்நாடு, சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் தலைவாசல் அருகே 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம். ஆறு அகழிகளால் சூழப்பட்டு இருப்பதால் அது ஆறகளூர் எனப் பெயர் பெற்றது. சோழர் காலத்தில் (கி.பி.1100-களில்), அருகில் இருக்கும் கிராமங்களை உள்ளடக்கிய ஒரு குறு நாட்டின் தலைநகரம். வாணக்கோவரையர் என்ற குறுநில மன்னனால் ஆட்சி செய்யப்பட்ட இந்த ஊரில் இன்றும் பிரசித்திப் பெற்ற காமநாதீஸ்வரர் ஆலயம் உள்ளது. வேறு எங்கும் இல்லாத வகையில் அட்ட பைரவர்களும் இந்த கோவிலில் அமைந்திருப்பது சிறப்பு. இந்த ஊராட்சி, கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 15831 ஆகும். தற்போதைய நிலையில் 16931 பேர் உள்ளனர். இவர்களில் பெண்கள் 8771 பேரும், ஆண்கள் 8240 பேரும் உள்ளனர்.

Also Read  உங்கள் ஊர் வரவு-செலவு