பெரியேரி ஊராட்சி

பெரியேரி ஊராட்சி / Periyeri Gram Panchayat

பெரியேரி என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் வசிஷ்ட ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். இந்த ஊர் தலைவாசலிலிருந்து 5.4 கி.மீ. தொலைவிலும், வி.கூட்டுரோட்டில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. பெரியேரியின் எல்லைகளாக கிழக்கே பாக்கம்பாடி, மேற்கே ஆறகழூர், வடமேற்கே நத்தக்கரை, வடக்கே வி.கூட்டுரோடு, தெற்கே சித்தேரி ஆகியவை உள்ளன. இந்த ஊராட்சி, கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4376 ஆகும். தற்போதைய நிலவரப்படி 4874 பேர் உள்ளனர். இவர்களில் பெண்கள் 2462 பேரும், ஆண்கள் 2612 பேரும் உள்ளனர்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாக வள்ளுவர் தெரு, காந்தி நகர், அண்ணா நகர், பாரதி நகர், பெரியேரி முதல் வார்டு, இந்திரா நகர் ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன.

Also Read  புனவாசல் ஊராட்சி