TNPSA
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட மையத்தின் சார்பாகவும் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாகவும் இன்று ஊராட்சி செயலர் எழுச்சி தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் அருமைக்குரிய சகோதரர் கே. மகேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.
மேலும் இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி இயக்குபவர், துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் சகோதரர் ஈஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்நிழ்வில் நமது ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்ததுடன் இன்று வாழப்பாடி துக்கியம்பாளையம் கமலாலயம் ஆதரவற்றோர் குழந்தைகள் அறக்கட்டளை நிலையத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு சிக்கன் பிரியாணி நமது அமைப்பு சார்பாக வழங்கி, குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது மிக சிறப்பாக அமைந்தது.
எனவே இன்றைய இந்த நாளில் நாம் செய்த பெரும் தவம் புண்ணியம் என்னவெனில் நமது அமைப்பின் பால் பற்று கொண்ட அனைவருக்கும் நமது இந்த மிகப்பெரிய ஊதிய தொகையை வாங்கிய நமது TNPSA அமைப்பினை என்றென்றும் மறவாமல் நமது சங்கம் மென்மேலும் வளர, வளர்ந்திட நாம் அனைவரும் ஒன்றுபட்டு சாதித்து காட்டிட இந்த நேரத்தில் சபதம் ஏற்று மென்மேலும் பல அரசாணைகள் பெற நாம் உறுதுணையாக இருந்து பாடுபட சேலம் மாவட்ட நமது உறவுகள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் பணியாற்றுவோம் பணியாற்றுவோம் .
சேலம் மாவட்ட மையம் மற்றும் வாழப்பாடி ஒன்றிய மையம் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்