மூன்றுகட்ட போராட்டம் – சேலம் மாவட்ட தலைவர் அறிக்கை

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் அவர்களின் அறிவிப்பின்படி

சேலம் மாவட்டத்
தலைவர் கலை.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…..

முறையான கால முறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றி வரும் பதிவரை எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளர்களுக்கு விரிவுபடுத்த அரசாணை வெளியிட வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தின் சார்பாக 3 கட்ட போராட்டம் நடத்த மாநில மையத்தால் முடிவு செய்து அதில் முதல் கட்டமாக மார்ச் 12-ஆம் தேதி புதன்கிழமை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி செயலாளர்களும் ஒரு நாள் மாநில அளவில் தற்செயல் விடுப்பு மற்றும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடைபெறும்.

இரண்டாம் கட்டம் போராட்டமாக ஏப்ரல் 4-ந்தேதி வெள்ளிக்கிழமை அனைத்து ஊராட்சி செயலாளர்களும் சென்னை ஊரக வளர்ச்சித்துறை ஆணையத்தில் பெருந்திரல் முறையிடும் நடைபெறும்.

மூன்றாம் கட்ட போராட்டமாக ஏப்ரல் – 21 ஆம் தேதி திங்கட்கிழமை முதல்சென்னை ஊரக வளர்ச்சித் துறை ஆணையரத்தின் முன்பு காலவரையற்ற தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற இருப்பதால்,தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி செயலாளர்களும் ஒற்றைக் கோரிக்கை வலியுறுத்தி நடைபெறும் மூன்று கட்ட போராட்டங்களிலும் ஊராட்சி செயலாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு ஒற்றை கோரிக்கையை வெல்ல வேண்டும் என சேலம் மாவட்டத் தலைவர் கலை.சிவசங்கர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Also Read  காட்டுக்கோட்டை ஊராட்சி