உங்கள் ஊராட்சி-உங்கள் பங்கு

ஊராட்சி

தமிழ நாட்டில் 12525 ஊராட்சிகள் இருந்தன. தற்போதைய நகரமயமாக்கலில் 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அதேநேரத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக ஊராட்சிகளை பிரிப்பது மற்றும் சேர்ப்பது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உங்கள் ஊராட்சி

தான் பிறந்த ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என உள்ளம் கொண்டவர்களை இணைத்து,ஊராட்சிகளின் நீண்ட கால திட்டமான சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதை செயல்படுத்தி, ஊராட்சிகளின் பொது மின்சார செலவுகளை குறைத்திட வேண்டும்.

இந்த திட்டத்திற்கு அரசை மட்டும் சாராது, அந்தந்த ஊராட்சியில் பிறந்து நல்ல நிலையில் உள்ள அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

ஏனெனில், தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளில் 90 சதவீத ஊராட்சிகளின் அடிப்படையான நிதி தேவைக்கு கூட மத்திய,மாநில அரசுகளை எதிர்பார்த்து இருக்கவேண்டிய நிலை உள்ளது.

நாட்டின் முதுகெழும்பான ஊராட்சிகளை, நிர்வாகம் செய்வதற்கு நிதி இல்லை என காரணம் காட்டி, நகரமயமாக்கும் செயலை தொடர்ந்து செய்துவருகிறது ஆளும் அரசுகள்.

நமது பங்கு

நமது ஊராட்சியை காப்பாற்றிட அனைவரும் ஒன்று கூடல் அவசியம் ஆகும். தற்போது இந்த துறையின் அமைச்சர்,முதன்மை செயலாளர்,ஆணையர் என மூவரும் ஊராட்சிகளின் வளர்ச்சியை பற்றி சிந்தித்து செயல்படுத்தி வருகின்றனர்.

Also Read  மூன்று வாரத்தில் முடிகிறது உள்ளாட்சிகளின் பதவிகாலம்

மூவரும் முடிவெடுத்து, எங்கள் ஊர்-எங்கள் பங்கு என்ற திட்டத்தை ஏற்படுத்தி,ஊராட்சிகளின் நீண்டகால திட்டங்களை உருவாக்கி செயல்படுத்திட வேண்டும். அப்போது தான் ஊராட்சிகள் காப்பாற்றப்படும்.