நிதிநிலை
சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்கியராஜ் நம்மிடம் கூறியதின் தொகுப்பு.
கடந்த நான்கு மாத காலமாக ஊராட்சியின. முதல் கணக்கிற்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் தான் வந்தது. இன்று எங்களது பெரும்பச்சேரி ஊராட்சியின் முதல் கணக்கிற்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆணையர் அய்யா அவர்களுக்கு நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆணையர் காலத்தில் ஊரகவளர்ச்சித் துறையில் சில மாற்றங்கள் நிகழ வேண்டும்.எங்கள் துறையின் ஆணிவேர்வரை அறிந்த ஆணையரால் மட்டுமே அது சாத்தியப்படும்.
எங்கள் ஊராட்சியின் மக்கள் தொகை 4ஆயிரத்து மேற்பட்டது. ஊராட்சியின் ஆண்டு வருமானம் என்பது,வீட்டுவரி மூலமாக 2லட்சத்து 50 ஆயிரம்,தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் மூலமாக 1 லட்சத்து 50 ஆயிரம், கட்டிட அனுமதி மூலமாக (தோராயமாக) 4 லட்சம் என ஆண்டுவருமானம் சுமார் 8 லட்சம்.
ஊராட்சியின் மாதம்தோறும் தேவைப்படும் நிரந்தர செலவில் ஊதியம் வழங்கும் வகையில்ல 60ஆயிரம், மின்சாரகட்டணம் 70 ஆயிரம்,குடிநீர் கட்டணம் 40 ஆயிரம் என மொத்தம் 1லட்சத்து 70 ஆயிரம். ஆக, ஆண்டிற்கு 17லட்சம் ரூபாய் தேவை.
மாற்றங்கள்
ஊராட்சியின் ஆண்டு வருமானம் 8லட்சம். நிரந்தர செலவு மட்டும் 17 லட்சம். இதுபோக, ஊராட்சியின் அன்றாட செலவினத் தொகை என்பது தனி ஆகும்.
1.மின்சார கட்டணத்தை குறைக்கும் வகையில் ஊராட்சி கட்டிடம் உட்பட குடிநீர் தேவைக்கு பயன்படும் மின்மோட்டார்களின் பயன்பாட்டை சூரிய ஒளி மின்சாரத்திற்கு மாற்றினால், செலவுத்தொகையில் கணிசமான தொகை குறையும்.
2.ஊராட்சியின் வருமானத்தை பெருக்கும் வகையில் ஊராட்சியின் சொந்தமான நிலங்களில் பணப்பயிர்களை நூறுநாள் வேலை பணியாளர்களை கொண்டு உற்பத்தி செய்ய வேண்டும்.
இப்படி நிரந்தரமான சில மாற்றங்களை அய்யா அவர்களின் காலகட்டத்தில் செயல் படுத்திட வேண்டும். அப்போது தான் ஊராட்சிகளின் கட்டமைப்பு காலகாலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்றார் மாவட்ட தலைவர் பாக்கியராஜ்.
இவர் சொல்வது போல ஊரக வளர்ச்சி துறையில் பல நிரந்தர மாற்றங்களை ஆணையர் கொண்டு வருவார் என நாமும் நம்புகிறோம்.