கத்தாலம்பட்டியில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தருவேன் தலைவி மல்லிகா உறுதி

தொப்புள்கொடி உறவு

மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.

சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12வது ஊராட்சியாக கத்தலாம்பட்டி கிராமம் உள்ளது.

கத்தலாம்பட்டி ஊராட்சி தலைவியாக மல்லிகா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நமது இணையத்தின் வாயிலாக அவரிடம் வாழ்த்துக்களை கூறி, அவரிடம் பேச ஆரம்பித்தோம்,

அப்போது அவர் கூறியதாவது:

ஈழத்தமிழர்கள் இங்கு அகதிகளாக வந்து கடந்த 35 வருடங்களுக்கு மேலாக குடியுரிமை பெற்று(சிலோன் காலனி) வசித்து வருகிறார்கள்.

மேலும் இவர்களுக்கு தேவையான சாலை வசதிகள், வேலைவாய்ப்புகள் மற்றும் குடிநீர் வசதிகள் போதுமானதாக இல்லை,

அதனால் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சிறப்பான முறையில் செய்து கொடுப்பேன்.

இனிவரும் காலங்களில் இந்த மக்களுக்கு என்ன தேவைகள் இருக்கிறதோ அவற்றை தீர்த்து வைப்பதே எனது கடமை, என்று அவர் நம்மிடம் எடுத்துரைத்தார்.

Also Read  சிறுகுடியில் சிறப்பாக நடைபெற்ற கிராமசபை கூட்டம்