விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சி சார்பாக இன்று ஊர்ப்பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா வைரசை எதிர்கொள்ளும் வகையில் கபசுர குடிநீர் ஊராட்சி மன்ற தலைவர் S.செந்தாமரை அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் (மேலமடை) ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் 2, 3, 4, 5, 6 வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு அவரவர் வார்டு மக்களுக்கு கபசூர குடிநீரை வீடு வீடாக சென்று வழங்கினார்கள்.