கடுக்காய் – வயிற்றில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும்..!!

கடுக்காய்

கடுக்காய் யில் மேற்புற தோல் ஓடுகள் மட்டுமே மருத்துவ குணம் கொண்டவை. அதன் விதைகள் சிறிது நச்சு தன்மை வாய்ந்தவை எனவே அவற்றை  பயன்படுத்தக்கூடாது.

தினமும் இரவு சாப்பிட்டு முடித்ததும் கடுக்காயின் ஓடுகளை பொடியாக்கி அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டு,

ஒரு கோப்பை நீர் அருந்தி வர உடல் வலிமை பெரும். மிகுந்த ஆற்றல் உடலில் உண்டாகும்.

தோலை சிறிதளவு எடுத்து அதனுடன் இஞ்சி,மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நெய்யில் வதக்கி சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டு  வந்தால் ஜீரண சக்தி மேம்படும்.

வயிற்றில் இருக்கும் நச்சுக்கள் நீங்கி வயிறு சுத்தமாகும்.

கடுக்காய் தூளை 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அதே அளவு சுக்கு, திப்பிலி தூள்களை கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும்

அரை டீஸ்பூன்  அளவு சாப்பிட்டு வர வாத,பித்த குறைபாடுகள் அனைத்தும் நீங்கும்.

நீரிழிவு பாதிப்பு கொண்டவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அரை டீஸ்பூன் அளவு கடுகை தூளை, வாயில் போட்டு கொண்டு சிறிது நீரை அருந்தி வந்தால்

ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்து, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும்.

Also Read  வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு முகத்தின் கரும்புள்ளி களை போக்கும் எளிய குறிப்புகள்...!!

கடுக்காய் காரத்தன்மை கொண்ட அமிலங்கள் நிறைந்த ஒரு மூலிகை ஆகும். இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எப்பேர்ப்பட்ட நச்சுகளையும் போக்கும் சக்தி அதிகம் உள்ளது.

கடுக்காய் தூள் பொடியை வாரத்திற்கு ஒரு முறை இதமான வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர, நமது உடலில் ஓடும் ரத்தத்தில் சேர்ந்திருக்கும் நச்சுக்கள் எல்லாம் நீங்கி ரத்தம் சுத்தியாகும்.

எங்கள் முகநூல் பக்கம்                                                               மேலும் செய்திகளுக்கு