கொரொனா- மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

:கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், மருத்துவ பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். எனினும், வைரஸ் மீதான அச்சத்தின் காரணமாக, இவர்களை மக்கள் புறக்கணிக்கின்றனர். இவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது. இத்தகைய நடத்தைகள், சமூகத்தில் இடையூறுகளை ஏற்படுத்தும்.இந்த இக்கட்டான சூழலில், மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

* பொது சேவைகளில் ஈடுபடுவோரை பாராட்டி, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆதரவாக இருக்கவேண்டும்.
* உலக சுகாதார அமைப்பு அல்லது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ தகவலை மட்டுமே பிறருக்கு பகிரவேண்டும்
* சமூக ஊடகங்களில், ஒரு செய்தியை பகிர்வதற்கு முன், அந்த தகவல் உண்மையானதா என்பதை முதலில் ஆய்வு செய்ய வேண்டும்

* கொரோனா வைரசில் இருந்து மீண்டு வந்தவர்களின் கதைகள் போன்ற நேர்மறையான செய்திகளை பகிரவேண்டும்
* அதே நேரத்தில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் பெயர் மற்றும் அடையாளத்தை வெளியிடக்கூடாது
* மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை வெளியிடக்கூடாது
* மருத்துவ, சுகாதார ஊழியர்கள் மற்றும் காவல்துறையினரை குறிவைத்து எந்த விமர்சன பதிவுகளையும் பகிரக்கூடாது
* இந்த வைரஸ் பரவலுக்கு, குறிப்பிட்ட சமூகத்தினர்தான் காரணம் என முத்திரை குத்தக்கூடாது

Also Read  கொரொனா-உள்ளாட்சி பயணியாளர்களுக்கு 50லட்சம்

சிகிச்சைப் பெற்று வருவோரை, ‘கொரோனால் பாதிக்கப்பட்டோர்’ என அழைக்கக்கூடாது; ‘கொரோனாவில் இருந்து மீண்டு வருவோர்’ என அழைக்கவேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.