fbpx
28.1 C
Chennai
Friday, October 17, 2025

கல்யாணிபுரத்தில் கொரொனா தடுப்பு பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் கொரானா தடுப்பணிகளை ஊராட்சி தலைவரே களம் இறங்கி செய்து வருகிறார். கிருமி நாசினி தெளிப்பது,சானிடைசர் கொண்டு கைகளை கழுவுவது போன்ற பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மக்கள் பணியில் மருதுஅழகுராஜ் – திருப்பத்தூரில் தொடரும் சேவை

0
நிவாரணம் கவிஞரும் பத்திரிகையாளருமான மருதுஅழகுராஜ் அவர்கள் திருப்பத்தூர் தொகுதி முழுவதும் கொரானாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவிப் பொருட்கள் வழங்கிவருகிறார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொள்ளுகுடிப்பட்டி, வேட்டங்குடிப்பட்டி, மெய்யபட்டி, உடையநாதபுரம், கிருஷ்ணாபுரம் உள்ளட்ட பகுதி வாழ் மக்களுக்கு 01-05-2020 அன்று நிவாரண பொருட்களை வழங்கினார் மருது அழகுராஜ்.

இராமசாமியாபுரம் ஊராட்சியில் கிருமி நாசினி

0
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சியில் அனைத்து முக்கிய வீதிகளிலும் ப்ளீச்சிங் பவுடர் கிருமி நாசினி தூவப்பட்டது.

சாதனையை நோக்கி பயணப்படும் பேராசிரியர் தலைமையிலான ஓர் ஊராட்சி

0
  இராமச்சந்திரபுரம் விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி. கல்லூரி பேராசியராக பணியாற்றிய ஆறுமுகம் என்பவரை தலைவராக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இவரைப் போல சமுகத்தின் மீது மாறாத பற்றுடன் பலரும் உள்ளாட்சி பதவிக்கு வந்திருக்கிறார்கள். தன்னை தலைவராக்கிய மக்களுக்கு அனைத்தும் கிடைக்கவேண்டுமென அயராது பாடுபட்டு வருகிறார். இந்தியாவின் இதயம் கிராமம் என்று சொன்ன...

கொரொனா தடுப்பு பணியாளர்களுக்கு நடராஜபுரம் ஊராட்சி சார்பாக நிவாரண பொருட்கள்

0
சிவகங்கை மாவட்டம் நடராஜபுரம்பஞ்சாயத்தில் கொரோன தொற்று நோயை பரவாமல் தடுப்பதற்கு கடுமையாக உழைத்த பஞ்சாயத்துநிர்வாகிகள் -6 சுகாதாரபணியாளர்கள் - 9 தன்னார்வலர்கள் - 6 தண்ணீர் தொட்டி பராமரிப்பாளர்கள் -8 தூய்மைபணியாளர்கள் - 5 கூட்டுறவு பணியாளர்கள் -3 என மொத்தம் 38 நபர்களுக்கும், அவர்களின் பணியை பாராட்டும் விதமாகவும், அவர்களை ஊக்கப் படுத்தும் விதமாகவும் மற்றும் அவர்களுக்கு நன்றி செலுத்தும்...

கொரொனாவும்- கிராமப்புறமும்

0
தற்சார்பு வல்லரசு நானென்று மார்பு தட்டிய பெரியண்ணன் அமெரிக்கா கதிகலங்கி நிற்கிறது. உண்மையை உலகிற்கு சொல்லாமல் சீனா மறைக்கிறது. வளரந்த நாடுகள் எல்லாம் அடுத்து எந்த நிலைக்கு செல்லும் என்பதை காலம் தான் சொல்லப்போகிறது. அறிவியலின் எச்சமாய் வந்த அத்தனை தொழில்களும் முடமாகி முற்றிலும் முடங்கிப்போய் கிடக்கிறது. கணினியே உலகம் என்ற கூட்டமெல்லாம்,அலுவலகம் விடுத்து...

மாத்தூர் ஊராட்சியில் துரிதகதியில் மக்கள் பணி

0
விருதுநகர் மாவட்டம் மாத்தூர் ஊராட்சி( 29.4.20) ஆர்.சி.தெருக்களில் கிருமி நாசினி தெளிக்க பட்டது, மற்றும் வடக்கு தெரு வில் ப்ளீச்சிங் பவுடர் போடப்பட்டது மற்றும் இ.சேவை மையம் பின்பு உள்ள மோட்டார் பழுது பார்க்கப்பட்டது. ஊராட்சி தலைவர் செல்வமகாலட்சுமி உத்தரவில் ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் மேற்பார்வையில் அனைத்து பணிகளும் துரிதமாக...

ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்-அயன்கரிசல்குளம் ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் வழக்கம் போல் தூய்மை பணிகளுடன் சாலைகளில் கிருமி நாசினி பவுடர் போடப்பட்டது. ஆட்டோ மூலமாக கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. நமது தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மின் மோட்டார் வயரிங் சிறிய பழுது பார்த்தல் போன்ற பணிகள் தலைவர் திருமதி கா.பழனிச்செல்வி அவர்கள் முன்னிலையில்...

தன்னார்வத்தோடு இளைஞர்கள் பணியாற்றும் மம்சாபுரம் ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள மம்சாபுரம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணியில் உள்ளூர் இளைஞர்கள் ஆர்வத்தோடு ஊராட்சியோடு இணைந்து பணியாற்றி வருகின்றனர். கிருமி நாசினி. தெளிப்பதில் இளைஞர்கள் தன்னார்வத்தோடு பங்காற்றி வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு தனது இல்லத்தில் உணவு வழங்கி வருகிறார் ஊராட்சி தலைவர்.

குன்னூர் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் வாத்திராயிருப்பு ஒன்றியத்தில் உள்ள குன்னூர் ஊராட்சியில் கொரொனா தடுப்பு தொடர்ந்து நடந்துவருகிறது என்றார் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகதீஸ்வரி.

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்