சாதனையை நோக்கி பயணப்படும் பேராசிரியர் தலைமையிலான ஓர் ஊராட்சி

 

இராமச்சந்திரபுரம்

விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி.

கல்லூரி பேராசியராக பணியாற்றிய ஆறுமுகம் என்பவரை தலைவராக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இவரைப் போல சமுகத்தின் மீது மாறாத பற்றுடன் பலரும் உள்ளாட்சி பதவிக்கு வந்திருக்கிறார்கள்.

தன்னை தலைவராக்கிய மக்களுக்கு அனைத்தும் கிடைக்கவேண்டுமென அயராது பாடுபட்டு வருகிறார்.

இந்தியாவின் இதயம் கிராமம் என்று சொன்ன தேசத்தந்தையின் எண்ணத்தை நிசமாக்க போராடும் களப்போராளி.

இந்த செய்தி ஆறுமுகம் அவர்களை புகழ வேண்டும் என்பதற்காக அல்ல. உண்மையான உழைப்பாளிகளை பாராட்டுவது பத்திரிகை நெறி என்பதற்காகத்தான்.

ஆறுமுகம் எடுத்துவைக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் நமது இணையம் என்றும் துணை நிற்கும்.

உங்கள் கிராமத்திற்கு எதெல்லாம் நிரந்தர தேவை என்று கேட்டோம். அவர் கூறியது இதோ…

ஊராட்சிக்கு நிரந்தர தேவைகள்.
1. நீர் மேலாண்மை நிறுவ குழுக்கள், அதற்கான அரசு நிதியுதவி.
2. கிராம வேலை வாய்ப்பை உருவாக்க பயிற்றுவிக்க பயிற்றுனர்கள்.
3. ஊராட்சி உழவர் சந்தை.
4. விவசாய பொருட்கள் சேமிப்பு கிடங்குகள்.
5. ஊராட்சி கூட்டுறவு அங்காடி.
6. ஒருங்கிணைந்த பால்பண்ணை.
7. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்.
8. ஊராட்சி வைப்பு நிதி.
9. TNPSC, SSC, UPSC, TRB,பயிற்சி கூடங்கள்.
10. ஊராட்சி மன்ற தலைவர் பேரிடர் மேலாண்மை நிதி.                                                11. ATM வசதிகளுடன் கூடிய கிராம வங்கி 12. கிராம நிர்வாகம் தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரம்.

Also Read  மக்கள் சேவையில் மம்சாபுரம் ஊராட்சி தலைவி

இப்படி ஒரு பட்டியலை கொடுத்தார்.

அவரின் சிந்தனை அனைத்து ஊராட்சிகளும் முன்னேறும்  ஓர் அற்புத திட்டமாய் இருந்தது.

அனைத்து ஊராட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு இமாலய இலக்கை அடைய நமது இணையமும் இணைந்து பயணப்படும்.