விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மல்லி கு. ஆறுமுகம்.
நமது “tn பஞ்சாயத்து செய்திக்காக” அளித்த சிறப்பு பேட்டி.
அதில் அவர் கூறியதாவது:-
எங்களது ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி மன்றங்கள் மொத்தம் 29.
மிகவும் பெரிய பரப்பளவு கொண்டது நான் கடந்த, 8ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் ஒன்றிய பெருந்தலைவராக பொறுப்பேற்று இருந்தேன்.
அதன் பிறகு இத்தனை ஆண்டுகள் வரை எங்கள் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் எந்தவிதமான முன்னேற்றங்கள் காணவே இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஜனத்தொகை, கணக்குப்படி ஒரு லட்சத்து 2 ஆயிரத்து சொச்சம் மக்கள் இருந்தார்கள்.
அதன்பிறகு 10 ஆண்டுகளில் எவ்வளவு ஜனத்தொகைப் பெருக்கம் இருந்திருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டுவிடுகிறேன்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மிகவும் முக்கியமாக நடைபெற வேண்டிய பணி என்னவென்றால் சுகாதார பணிகள் தான்.
சுத்தம், சுகாதாரம் நோக்கித்தான் எங்களது பயணம் தொடர உள்ளது.
பல வீதிகளில் சாலை வசதி என்பது சரிவர கிடையாது.
மழை சின்ன மழை பெய்து விட்டாலே போதும் ஊர் முழுவதும் மிகவும் படத பாடுபடும்.
எனவே எங்களுடைய முதல்கட்டப் பணி அடிப்படை சுகாதார வசதிகளை சீரமைப்பது மட்டுமே, ஆனால் அதற்கான போதிய நிதி ஆதாரம் தான் எங்களிடம் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
அந்த நிதி நிலைக்கு அரசாங்கத்தை நம்பியே நாம் நமது பணியை செய்ய வேண்டிய ஒரு நிர்பந்தத்தில் இருக்கிறோம்.
மேலும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது என்னுடைய நோக்கம் பதவிகள் இன்று வரும் போகும்….!
அதுபோல் பணமும் இன்று வரும் நாளை போகும்.
ஆனால் இது போன்று மக்கள் சேவை செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பது என்பது மாபெரும் அரிது.
பொதுவாழ்க்கையில் எல்லோரையும் திருப்தி செய்து விட முடியுமா என்றால் அது ஒரு பெரிய கேள்விக்குறி தான் இருப்பினும் நம்முடைய செயல்பாடு நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் அப்படியே எங்களது 29 ஊராட்சிமன்ற தலைவர் களையும் அனுசரித்து வரும் காலகட்டத்தில் சிறப்பான ஒரு பணியை செய்ய தயாராக உள்ளோம் என்று அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.