விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.ராமச்சந்திரபுரம் ஊராட்சி தலைவராக முனைவர் பட்டம் பெற்ற ஆறுமுகம் பதவிக்கு வந்ததைப் பற்றி செய்தி வெளியிட்டு இருந்தோம்.
தானே களம் இறங்கி பல பணிகளை செய்து வருகிறார் ஆறுமுகம்.
எங்கள் இணைய ஆலோசர்களில் ஒருவரான மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அவர்கள் ஆறுமுகத்தை பற்றி விசாரித்தார்.
கொரொனா பிரச்சனை முடிவுக்கு வந்த பிறகு,ஆறுமுகம் போல மக்கள் பணி ஆற்றும் பஞ்சாயத்து தலைவர்களை ஒருங்கிணைத்து பல மாற்றங்களை பஞ்சாயத்துகளில் கொண்டுவர வேண்டும் என்றார்.
அவர் சொன்ன விடயங்களை நமது இணைய தளம் விரைவில் செயல்படுத்தும்.
முனைவர் ஆறுமுகத்தின் மக்கள் சேவை என்றென்றும் தொடர நமது இணையத்தின். சார்பாக மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.