இடைக்கால ஓய்வூதியம் வேண்டாம்..
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் கிராம ஊராட்சியில் பணியாற்றிவரும் கிராம ஊராட்சி செயலர்கள் 2018 ம் ஆண்டு முதல் முறையான காலமுறை ஊதியக்கட்டில் பணிபுரிந்து வருகின்றனர்..முழு நேர பணியாளர்களான ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து அரசாணை வெளியிட வேண்டும் என்று கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் நடத்தியது..அதன் அடிப்படையில் பகுதிநேர பணியாளர்களுக்கு வெளியிடப்படும் அந்த அரசாணையில் ஊராட்சி செயலாளர்களை இணைக்காமல் அரசாணை வெளியிடப்பட்டது..இதனை எங்களுடைய அமைப்பு வரவேற்றது..
அதே தருணத்தில் ஊராட்சி செயலாளர்களுக்கு தனியே உறுதியளிக்கப்பட்ட ஓய்வு திட்ட அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை..கோப்பு இன்றளவும் நிதித்துறை பரிசீலனையில் இருக்கிறது..இதனால் இன்று வரை ஓய்வு பெற்ற ஊராட்சி செயலர்களும் 01.01.2026 முதல் இன்று வரை ஓய்வு பெற்ற ஊராட்சி செயலர்களும்,2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓய்வூதிய அரசாணைப்படையான குறைவான பண பலன்களையே பெற்று வருகிறார்கள்..உதாரணமாக இன்று ஓய்வு பெறும் பகுதி நேர பணியாளரான சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் மாதாந்திர ஓய்வூதிய தொகையான ரூபாய் 3400 ஒட்டுமொத்த தொகையான ரூபாய் 200000 பெறுகிறார்கள்.. ஆனால் இன்றைய தேதியில் ஓய்வு வரும் ஊராட்சி செயலாளர்கள் மாதாந்திர ஓய்வுத் தொகையாக ரூபாய் 2000 ம் ஒட்டுமொத்த தொகையாக ரூபாய் 100000 பெறுகிறார்கள்..இது மிகப்பெரிய இழப்பாக உள்ளது
இந்நிலையில் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கும் வரை இடைக்காலமாக ஓய்வு பெறுபவர்களுக்கு பகுதிநேர பணியாளர்களுக்கான ஓய்வூதிய தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட உள்ளதாக தகவல் வருகிறது..இது தவிர பகுதி நேர பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய தொகையை இடைக்காலமாக கேட்டு ஒரு அமைப்பு சேலத்தில் தீர்மானமும் நிறைவேற்றி இருக்கிறது..போராட்ட இயக்க நடவடிக்கைகளும் அறிவித்துள்ளது..
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தை பொருத்தமட்டில் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பது மட்டுமே கோரிக்கையாக இருக்கிறது..இடைக்காலமாக ஊராட்சி செயலாளர்களுக்கு பகுதிநேர பணியாளர்களுக்கு பொருந்தும் அரசாணை தேவையில்லை..பகுதி நேர பணியாளர்களோடு மீண்டும் மீண்டும் இணைக்க சில அமைப்புகள் தீவிரமாக இருக்கிறது..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் ஊரக வளர்ச்சித்துறை உயர் அலுவலர் பெருமக்களும் ஊராட்சி செயலாளர்கள் ஓய்வூதியம் தொடர்பாக வேறு எந்த புதிய அரசாணையும் வெளியிட வேண்டாம் என்றும்,மாற்று அமைப்புகள் கேட்கின்ற பகுதி நேர பணியாளருக்கான ஓய்வூதியம் எங்களுக்கு தேவையில்லை என்றும்,ஊராட்சி செயலாளர்களை பொருத்தமட்டில் தமிழ்நாடு அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து அரசாணை வெளியிடும் பொழுது அதனை 01.01.2026 ஆம் தேதி முதல் முன் தேதி இட்டு வழங்குவதே ஒட்டுமொத்த ஊராட்சி செயலர்களின் வேண்டுகோளாக உள்ளது என்பதையும் கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!





















