நிர்வாகம்.
ஒரு மாவட்ட ஊராட்சிகளின் ஒட்டுமொத்த நிர்வாகப் பொறுப்பு என்பது உதவி இயக்குநர் (ஊராட்சி) தலைமையிலேயே நடத்தப்படுகிறது.
இடமாறுதல் செய்யும் அதிகாரம் பிஏபிடிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் ஒன்றியம் விட்டு வேறொரு ஒன்றுயத்திற்கு ஊராட்சி செயலாளர்களை மாற்றுவது மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யும் அதிகாரம் ( மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன்) அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் குழப்பும் பணியை ஒரு மாவட்ட அதிகாரி செய்துவருகிறார். தனது விருப்பத்திற்கு ஏற்ப ஊராட்சி செயலாளர்கள தொடங்கி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரை மாற்றம் செய்கிறார்.
ஆனால், மாவட்ட பணிகளுக்கு மொத்த பொறுப்பும் உள்ள உதவி இயக்குநர் செய்வது அறியாது திகைத்து நிற்கிறார். ஏதோ ஒரு காரணத்திற்காக சோம்பேறியான ஒரு அதிகாரியை வட்டார வளர்ச்சி அலுவலராக முக்கியமான ஒன்றியத்திற்கு இடமாற்றம் செய்கிறார் பிஏபிடி.
அப்படிப்பட்ட அதிகாரியை வைத்துக் கொண்டு அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து, விவரங்களை மாநில மையத்திற்கு உதவி இயக்குநரால் எப்படி அனுப்ப முடியும். அப்படி அனுப்ப முடியாத செயலுக்கு, தலைமை அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது.
எந்த ஒரு நிர்வாக ரீதியான பதிலையும் மாநில மையத்திற்கு பிஏபிடி சொல்ல வேண்டியது இல்லை.
ஆக…நிர்வாக மாற்றத்தை ( இடமாற்றம்) இருவரும் கலந்து முடிவெடுப்பதே சரியாக இருக்கும்.
இப்படி பல மாவட்டத்தின் நிர்வாகம் திரிசங்கு நிலையில் தள்ளாடி வருகிறது.
ஊரக வளர்ச்சி இயக்குநர் சரியான உத்தரவை வழங்கி, நிர்வாகம் தொய்வில்லாது நடைபெற செய்யவேண்டும்.
கொசுறு தகவல்;- ஒரே ஒன்றியத்திற்குள் ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்வதற்குரிய முழு அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கே உண்டு. அந்த அதிகார வரம்பிற்குள் தனது ஆணவத்தை அதிகாரமாக பிஏபிடி செலுத்தும் நிலை பல இடங்களில் உள்ளது.