அரசியல் அதிகாரம் பக்கம் திரும்புமா லஞ்ச ஒழிப்புத் துறை

தீபாவளி வேட்டை

கடந்த இரண்டு மூன்று தினங்களாக பல்வேறு பட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பாக ரெய்டு நடந்துள்ளது. நல்ல விசயம் தான்.

ஆனால்…லஞ்சத்தின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார மையத்தில் உள்ளவர்களின் வீடுகளுக்கோ, அலுவலகங்களுக்கோ ரெய்டு சென்றதாக எந்த செய்தியும் வரவில்லை.

அரசு அலுவலங்களை பொருத்தவரை, ஒன்றிய மாவட்ட அளவில் மட்டுமே ரெய்டு நடத்தப்படுகிறது. தலைமை அலுவலகம் எல்லாம் நேர்மையின் பிறப்பிடமா உள்ளனவா?

தீபாவளி வேட்டையில் எந்த ஒரு காவல்நிலையத்திலும் ரெய்டு நடந்ததாக தெரியவில்லை?

அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகளின் அலுவலம் மற்றும் வீடுகளுகளில் ரெய்டு நடத்தாதது ஏன்?

இப்படி பல்வேறு கேள்விகளுக்கு விடையே கிடைப்பதில்லை.

Also Read  ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்