நன்றி தெரிவிப்பு தீர்மானம் நிறைவேற்றம்- தர்மபுரி K.கிருஷ்ணன்

நன்றி தீர்மானம்

தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தர்மபுரி.K.கிருஷ்ணன் அவர்கள் இன்று தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார்..

அப்பொழுது தர்மபுரியில் இன்று நடைபெற்ற சங்க கோரிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் நீண்ட நாள் நிலுவை கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றி தரப்படும் என சென்னையில் பேச்சுவார்த்தையின்போது உறுதியளித்த ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் திரு.ககன்தீப் சிங் பேடி இஆப, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் திரு.பொன்னையா இஆப,கூடுதல் இயக்குனர் திரு.சந்தோஷ் குமார், உள்ளிட்ட அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் உறுதி அளித்தபடி மிக விரைவாக அனைத்து பணியாளர்களுக்கும் அரசாணையை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த பேட்டியின் போது தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ், தர்மபுரி மாவட்ட தலைவர் ஜக்க சமுத்திரம் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் திருவருட்செல்வன், செந்தில்,மாநில மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி,மாநில தலைமை நிலை செயலாளர் பொன்னையன், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Also Read  மொரங்கம் ஊராட்சி - நாமக்கல் மாவட்டம்