விடுநர்
ரா.சந்திரன்
3.வது வார்டு உறுப்பினர்
7/199 தெற்கு தெரு
கள்ளம்புளி
பொய்கை ஊராட்ச்சி
கடையநல்லூர் வட்டம்
தென்காசி மாவட்டம்
செல்:9344500490
பெறுநர்
ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள்
பொய்கை ஊராட்சி அலுவலகம்
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
தென்காசி மாவட்டம்
பொருள்: பொய்கை ஊராட்சி மன்ற அலுவலகத்தில்28/10/2024ல் நடைபெறும் சாதாரண கூட்டத்தில் கலந்து கொள்ளாத துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய கோருதல் தொடர்பாக
வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் மூணாவது வார்டு உறுப்பினராக சமூக சேவை செய்து வருகிறேன் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று மூன்று வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில் அதிகப்படியான கூட்டங்களில் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை கலந்து கொள்ளாத உறுப்பினர்களிடம் வீட்டிற்கு சென்று கையொப்பம் பெற்று வருகிறீர்கள் இது உள்ளாட்சி சட்டத்தின் படி தவறான செயலாகும் ஆகையினால் இனி வருகின்ற கூட்டங்களில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கலந்து கொள்ளாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
நாள் :27/10/2024
இடம்:கள்ளம்புளி
இப்படிக்கு
சந்திரன் 3.வது வார்டு உறுப்பினர்