தலைவாசல் ஒன்றிய பெண் மண்டல துணை அலுவலர்களின் அடாவடி வசூல் -ஒற்றர் ஓலை

வசூல் வேட்டையா ஒற்றரே…

ஆமாம் தலைவா…சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியத்தில் மூன்று பெண் மண்டல வளர்ச்சி அலுவலர்களின் வசூல் வேட்டைக்கு அளவே இல்லையாம்.

விளக்கமாக சொல்லுங்க ஒற்றரே…

தலைவாசல் ஒன்றியம் மண்டலம் 1,2,5 என மூன்று மண்டலங்களில் பணிபுரியும் மண்டல துணை வளர்ச்சி அலுவலர்கள் எந்த பில் போட வேண்டும் என்றாலும் 10 சதவீதம் கமிசனை முன் கூட்டியே கொடுத்தால் மட்டுமே வேலை நடக்குமாம்.

மக்கள் பணிக்குமா கமிசன் ஒற்றரே…

ஆமாம் தலைவா…எந்த பில் வந்தாலும் கமிசன் இல்லை என்றால் நடக்காது. இந்த செய்தி உயர் அதிகாரிகள் மற்றும் அதிகார மையத்திற்கு செல்லட்டும்.அதன் பிறகாவது நல்லது நடக்கா என்று பார்ப்போம்.

அந்த மூன்று நபர்களின் பெயர் என்ன ஒற்றரே…

தலைவா…இந்த செய்தி வந்த பிறகும் அதே நிலை தொடர்ந்தால் அவர்களின் பெயர்களை வெளிப்படுத்தலாம். நடக்க போவதை கண்காணித்து வருகிறேன் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

 

Also Read  புறப்படுகிறார் அழகர் - ஒற்றர் ஓலை