செய்தி உண்மையா ஒற்றரே…
ஆட்சிக்கு அவப்பெயர் வருவதற்கு முன் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த ஆளும்கட்சி தயாராகி வருவது உண்மைதான் தலைவா…
ஜனவரி வரை பதவிகாலம் உள்ள 9மாவட்ட உள்ளாட்சிகளின் நிலை என்னவாகும் ஒற்றரே…
முன்கூட்டியே 9மாவட்டங்களுக்கும் சேர்த்தே நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தலை நடத்த முயற்சி நடப்பதாகவே தகவல் தலைவா…
ஆளும் கட்சியின் அதிகார தலையீடு இப்போதே உள்ளாட்சி நிர்வாகத்தில் நடப்பதாக தொடர்ந்து செய்தி வருகிறதே ஒற்றரே…
உண்மை தான் தலைவா…பஞ்சாயத்து தொடங்கி மாவட்ட ஊராட்சி வரை தவெக நிர்வாகிகள் அடாவடியாக அதிகாரம் செலுத்த தொடங்கி விட்டனர். உள்ளாட்சியில் பணியாற்றும் அதிகாரிகளில் பெரும்பான்மையானோர் அதிருப்தியில் உள்ளதாக தகவல்.
இது உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் அல்லவா ஒற்றரே…
கண்டிப்பாக தலைவா…சட்டமன்ற தேர்தல் வெற்றி அளவிற்கு கூட, உள்ளாட்சி தேர்தலில் தவெக வெற்றி விகிதம் குறையும் சூழலே உள்ளது தலைவா என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.
























