தணிக்கை
உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் திட்டங்களின் செயல் ஆக்கங்களை தணிக்கை செய்வதற்குரிய அமைப்பு உள்ளது.
நடைபெற்றுள்ள பணிகள் முறையாக நடைபெற்றுள்ளதா, அதற்கான தொகை சரியான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என தணிக்கை செய்யப்படும்.
ஊராட்சி நிதிகளில் நடைபெற்ற திட்டம்,ஒன்றிய நிதி,மாவட்ட நிதி மற்றும் பல்வேறு நிதிகளின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் பணி நடைபெறும்.
அப்படி நடைபெறும் பணிக்கு திட்ட அறிக்கை தயாரிப்பதில் ஆரம்பித்து பணி நிறைவடையும் வரை கண்காணிப்பது, நிறைவு சான்றிதழ் வழங்குவது வரை ஊரக வளர்ச்சித் துறையின் பொறியாளர்களின் பணி முதன்மையானது.
அப்படிப்பட்ட பொறியாளர்கள் தணிக்கை வளையத்திற்குள் வருவது இல்லை.
திட்டங்களில் நடக்கும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் தணிக்கை குழுக்கு ஏற்பட்டால், அதற்கான பதிலை ஊராட்சி செயலாளர்கள் தொடங்கி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தொடர்ந்து மற்ற அலுவலர்கள் சொல்ல வேண்டி உள்ளது.
திட்டங்களின் ஆதி அந்தமுமான பொறியாளர்களை தணிக்கையின் கேள்விகளுக்கு பதில் அளித்திடும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறையின் பிற ஊழியர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.
அவர்கள் வைக்கும் கோரிக்கைகளின் நியாயம் அறிந்து நல்ல தீர்வை ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் ஏற்படுத்தி கொடுப்பார் என நம்புவோம்.